கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது
பழைய உப்பள்ளியில் ஆஸ்பத்திரி அருகே கஞ்சா விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார் 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.;
உப்பள்ளி:-
போதை பொருள் விற்பனை
தார்வார் மாவட்டம் பழைய உப்பள்ளி போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள ஆயுர்வேதிக் ஆஸ்பத்திரி அருகே கடந்த சில மாதங்களாக போதை பொருள் விற்பனை ஜோராக நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார்கண்காணிப்பு பணியில்
ஈடுபட்டனர். அப்போது அங்கு 3 பேர் சந்தேகத்திற்கு இடமாக கையில் பையுடன் சுற்றி திரிந்து கொண்டிருந்தனர். அவர்களை மடக்கிய போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவர்கள் கையில் இருந்த பையை வாங்கி பார்த்தனர். அப்போது அதில் கஞ்சா இருந்தது. அதை கைப்பற்றிய போலீசார் 3 பேரையும் கைது செய்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
4 கிலோ கஞ்சா
போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்ததில் உப்பள்ளி எக்கேரியை அடுத்த மாருதி நகரை சேர்ந்த ரகுமான் (45), தபுபீக் சுதர்ஜி (35), பழைய உப்பள்ளி கணேஷ் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜேந்திரன் (34) என்று தெரியவந்தது. இவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமின்றி, ஆஸ்பத்திரிக்கு வருபவர்களிடம் கஞ்சாவை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இந்நிலையில் இது குறித்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 கிலோ கஞ்சா மற்றும் ஒரு ஆட்டோ, 3 செல்போன், ரூ.4 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். இது பற்றி பழைய உப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.