ஜனவரி முதல் அக்டோபர் வரை 3,917 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - மத்திய அரசு தகவல்

ஜனவரி மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரையில் 4,798 தங்கம் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-12-12 22:52 GMT

கோப்புப்படம் 

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது நாட்டில் அதிகரித்து வரும் தங்கம் கடத்தல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

"ஜனவரி மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரையில் 4,798 தங்கம் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 3,917.52 கிலோவாகும். இது முன்னெப்போதும் இல்லாத அளவாகும்.

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 3,982 தங்கம் கடத்தல் வழக்குகள் பதிவான நிலையில் 3,502.16 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. கடத்தலைத் தடுக்க, சுங்கத் துறை அமைப்புகளும், வருவாய் புலனாய்வு இயக்குனரகமும் தொடர்ந்து விழிப்புடன் இருக்கிறது."

இவ்வாறு பங்கஜ் சவுத்ரி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்