2017 முதல் 347 பேர் சாக்கடைகள், செப்டிக் டேங்க்களை சுத்தம் செய்யும் போது இறந்துள்ளனர்: மத்திய அரசு
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 347 பேர் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளை அபாயகரமான முறையில் சுத்தம் செய்ததால் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.;
புது டெல்லி,
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இதுவரை 347 பேர் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை அபாயகரமான முறையில் சுத்தம் செய்ததால் உயிரிழந்துள்ளதாக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் மந்திரி வீரேந்திர குமார், 2017-ல் 92, 2018-ல் 67, 2019-ல் 116, 2020-ல் 19, 2021-ல் 36 மற்றும் 2022-ல் 17 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று குறிப்பிட்டார்.
சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை மனிதர்கள் கைகளால் சுத்தம் செய்வது சட்டப்படி தடை செய்யப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.