இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 343- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது மக்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. கடந்த பல வாரங்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது மக்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: இந்தியாவில் மேலும் 343- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,46,71,562- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 5,263- ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று 4 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,30,612- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் விகிதம் 98.80 சதவிகிதமாக உள்ளது. நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 219.90 கோடி ஆகும்.