வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா, தெலுங்கானாவுக்கு ரூ.3,400 கோடி ஒதுக்கீடு

ஆந்திரா, தெலுங்கானாவில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது.

Update: 2024-09-06 22:15 GMT

புதுடெல்லி,

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த வரலாறு காணாத மழையால் இரு மாநிலங்களிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தால் இருமாநிலங்களிலும் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வெள்ளபாதிப்பை மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'யாரும் ஏமாறத் தேவையில்லை. உடனடி உதவிகளை வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். தற்போது, மத்திய அரசின் பங்கையும் சேர்த்து, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.3,448 கோடி நிதியை உடனடி உதவியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்