கர்நாடகத்தில் புதிதாக 317 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 317 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-09-12 21:45 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்று 9 ஆயிரத்து 325 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 218 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 638 பேர் குணம் அடைந்தனர். 3 ஆயிரத்து 945 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 3.39 அக உள்ளது. மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்