கர்நாடகத்தில் புதிதாக 306 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 306 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

Update: 2022-09-18 20:19 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்று 20 ஆயிரத்து 255 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பெங்களூரு நகரில் 145 பேர், மைசூருவில் 28 பேர், சிவமொக்காவில் 25 பேர், ராமநகரில் 15 பேர் உள்பட 306 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதியாகி உள்ளது. சிவமொக்கா, துமகூருவில் மட்டும் வைரஸ் தொற்றுக்கு புதிதாக தலா ஒருவர் இறந்தனர்.

இதுவரை 40 லட்சத்து 61 ஆயிரத்து 463 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 40 ஆயிரத்து 234 பேர் உயிரிழந்து உள்ளனர். 3 ஆயிரத்து 746 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். நேற்று 293 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்