இந்தியாவில் மேலும் 3,038 பேருக்கு கொரோனா
இந்தியாவில் மேலும் 3,038 பேருக்கு தொற்று உறுதியானது.
புதுடெல்லி,
இந்தியாவில் நேற்று 3,641 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 3,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20,129-ல் இருந்து 21,179 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4,47,26,246 லிருந்து 4,47,29,284 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 2,609 பேர் குணமடைந்த நிலையில் 9 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 901 ஆக அதிகரித்தது.
தூத்துக்குடியில் நுரையீரல் புற்றுநோய், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா பாதித்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயதான நபர் உயிரிழந்தார்.