கஞ்சா விற்ற வாலிபருக்கு 3 ஆண்டு சிறை; உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு

கஞ்சா விற்ற வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2022-09-04 14:49 GMT

மங்களூரு;


உடுப்பி டவுன் பதுடோன்சே கிராமத்தை சேர்ந்தவர் ஷபீரின். இவரது மகன் அர்பான் (வயது 27). இவர் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந்தேதி கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணை உடுப்பி கோர்ட்டில் நடந்து வந்தது. மேலும் வழக்கு குறித்து அவர் மீது போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் அந்த வழக்கிற்கான விசாரணை நேற்றுமுன்தினம் முடிவடைந்த நிலையில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

அதில் அர்பான் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபாரதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்து இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்