மாநகராட்சி என்ஜினீயருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கைதான மாநகராட்சி என்ஜினீயருக்கு தாவணகெரே லோக் அயுக்தா கோர்ட்டு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Update: 2023-01-25 16:43 GMT

சிக்கமகளூரு:-

சொத்து குவிப்பு

தாவணகெரே மாவட்டம் ஹரப்பனஹள்ளியை அடுத்த லட்சுமிபுரா கிராமத்தை சேர்ந்தவர் லஷ்கர் நாயக். இவர் தாவணகெரே மாநகராட்சியில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இதற்காக அவர் கொப்லா பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் மீது மாநகராட்சி ஊழல் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து தாவணகெரே லோக் அயுக்தா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் லோக் அயுக்தா போலீசார் லஷ்கர் நாயக்கின் வீடுகள் மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு அசையும் மற்றும் அசையா சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

3 ஆண்டு சிறை தண்டனை

மேலும் இந்த வழக்கு தொடர்பாக லோக் அயுக்தா போலீசார் லஷ்கர் நாயக்கை கைது ெசய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை தாவணகெரே கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்தது. இதையடுத்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது லஷ்கர் நாயக் மீதான குற்றச்சாட்டு ஆதாரங்களுடன் நிரூபணமானது. எனவே அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடியே 25 லட்சம் அபராதமும் வேண்டும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்