உள்ளாட்சி தேர்தல் முடிவு வெளியான நிலையில் 'சீல்' உடைக்கப்படாத 3 வாக்குப்பெட்டிகள் சிக்கின - மேற்கு வங்காளத்தில் பரபரப்பு
மேற்கு வங்காளத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிவில் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியது.;
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் கடும் வன்முறைக்கு பலர் பலியான நிலையில், உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. தேர்தல் முடிவில் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியது.
வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது மால்டா மாவட்டத்தில் சீல் வைக்கப்பட்ட வாக்குகள் எண்ணப்படாத 3 வாக்குப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மால்டா மாவட்டத்தின் கஜோல் உயர்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையமாக பயன்படுத்தப்பட்டது. அங்கு திறக்கப்படாத 3 வாக்குப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
'இது ஜனநாயக கேலிக்கூத்தாக தேர்தல் நடந்து முடிந்ததை காட்டுகிறது என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. ஆளும் கட்சி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளது. இது தொடர்பாக அந்த பகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்று வற்புறுத்தி உள்ளது.