3 ரெயில்கள் விபத்தில் சிக்கியது எப்படி?

கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

Update: 2023-06-02 18:29 GMT

* கொல்கத்தாவில் இருந்து சென்னை புறப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் முதலில் விபத்தில் சிக்கியது.

* தடம்புரண்ட கோரமண்டல் ரெயில் மீது எதிரே வந்த பெங்களூரு - ஹவுரா விரைவு ரெயில் மோதியது

* மேலும் சரக்கு ரயில் ஒன்றும் இந்த விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல்கள் தெரிக்கின்றன்.

* கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

* ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பஹானாகா ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நின்றுகொண்டிருந்த ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

* விபத்தானது இரவு 7.20 மணியளவில் நடந்துள்ளது இதில் குறைந்தது 179 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்தை அடுத்து கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பல பெட்டிகள் தடம் புரண்டன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

*ஹாலிமாரில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் விரைவு ரெயில் மாலை 3.20க்கு புறப்பட்டது. இரவு 7.20க்கு விபத்தில் சிக்கியது.

*பெங்களூருவில் இருந்து காலை 11.20க்கு ஹவுரா நோக்கி புறப்பட்ட அதிவிரைவு ரெயிலும் ஒடிசாவில் விபத்துக்குள்ளானது.

* பாலசோர் மாவட்டம் பாகநாக பஜாரில் சரக்கு ரெயிலும் தடம் புரண்டதால் பெரிய அளவில் விபத்து நேரிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்