ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் புகைப்படம் எடுத்தனர் - மந்திரி ரோஜா கின்னஸ் சாதனை முயற்சி
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக மந்திரி ரோஜாவை ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் போட்டோ எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆந்திரா:
ஆந்திர மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை மந்திரியாக இருப்பவர் ரோஜா. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக மந்திரி ரோஜாவை ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் போட்டோ எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்த 3 ஆயிரம் போட்டோகிராபர்கள் நேற்று விஜயவாடாவில் உள்ள தனியார் மண்டபத்தில் குவிந்தனர். இதையடுத்து அமைச்சர் ரோஜா திருமண மண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ஏறினார்.
அவரை சுற்றிலும் 3 ஆயிரம் போட்டோகிராபர்கள் நிற்கவைக்கப்பட்டனர். ஒன் கிளிக் ஆன் சேம் டைம் என்ற அர்த்தத்தில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் போட்டோகிராபர்களும் அமைச்சர் ரோஜாவை போட்டோ எடுத்தனர்.
உலகத்தில் இதுவரை யாரும் பெண் மந்திரி ஒருவரை ஒரே நேரத்தில் 3 ஆயிரம் போட்டோகிராபர்கள் போட்டோ எடுக்கவில்லை. இதையடுத்து 'வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்' கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இதையடுத்து மந்திரி ரோஜாவுக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.