பஞ்சாப்பில் பதுங்கி இருந்த கனடாவைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கைது

கனடாவைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-13 22:26 GMT

சண்டிகர்,

நாடு முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் தரன் தரன் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாகவும், அவர்கள் பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதல்களை சதி திட்டம் தீட்டி வருவதாகவும் போலீசாருக்கு ரகசியல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த கனடாவைச் சேர்ந்த பயங்கரவாதிகளான லக்பீர், சத்பீர் சிங் மற்றும் அவர்களுக்கு தலைமை தாங்கிய ஜெய்சல் ஆகிய 3 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்