3 மாநில தேர்தல் - பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு

திரிபுராவில் பாஜக ஆட்சியை தக்கவைக்கும் என 'இந்தியா டுடே -ஆக்ஸிஸ் மை இந்தியா' தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2023-02-27 14:06 GMT

புதுடெல்லி,

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன. 3 மாநிலங்களிலும் எந்த கட்சி வெற்றி பெறும் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

திரிபுராவில் பாஜக 36-45, இடது சாரிகள் 6-11 டிஎம்பி 9-16 இடங்களை பெறும் என இந்தியா டுடே சேனல் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.

திரிபுராவில் பாஜக 36-45 இடதுசாரிகள் 6-11 இடங்களை பெறும் என என் டிவி கணிப்பை வெளியிட்டுள்ளது.

நாகலாந்தில் என்.டி.பி.பி - பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும்,

மேகாலயாவில் என்.பி.பி. ஆட்சியை தக்க வைக்கும் என கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

மேகாலயாவில் பாஜக 5 , காங்கிரஸ் 3, என்பிபி -20, பிற கட்சிகள் 30 இடங்களை பெறும் என டைம்ஸ் நவ் சேனல் கணித்துள்ளது.

நாகாலாந்து என்.டி.டி.பி 38-48, என்.பி.எப் 3-8 காங்கிரஸ் 1-2, பிறகட்சிகள் 5-15 இடங்களை பெறும் என இந்தியா டுடே சேனல் கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்