கர்நாடக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3¾ சதவீதம் உயர்வு; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு

கர்நாடக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3¾ சதவீதம் உயர்த்தி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

Update: 2022-10-07 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் அரசு துறைகளில் சுமார் 6 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அத்துடன் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். மத்திய அரசு சமீபத்தில் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி உத்தரவிட்டது. இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, கர்நாடகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் பதிவில், "கர்நாடகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 3¾ சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது அகவிலைப்படி 27¼ சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1,283 கோடி நிதிச்சுமை ஏற்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்