அசாமில் மனைவியுடன் தகராறால் 3 பேர் கொடூர கொலை... மகளுடன் சரணடைந்த நபர்

அசாமில் குடும்ப தகராறில் மனைவி மற்றும் அவரது பெற்றோரை கொலை செய்த நபர் 9 மாத மகளுடன் சரணடைந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.

Update: 2023-07-25 08:37 GMT

கோலாகட்,

அசாமின் கோலாகட் மாவட்டத்தில் இந்தி பள்ளி சாலை பகுதியில் வசித்து வருபவர் நஜிபுர் ரகுமான். இவரது மனைவி சங்கமித்ரா கோஷ். இந்த தம்பதிக்கு 9 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்த நிலையில், மனைவியை அடித்து, தாக்கியதற்காக ரகுமான் சிறைக்கு சென்றார். பின்னர் சிறையில் இருந்து விடுதலையாகி சமீபத்தில் வெளியே வந்த அவர், வீட்டுக்கு சென்றார். இந்நிலையில், மீண்டும் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார்.

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில், வாக்குவாதம் முற்றி, மனைவியை கொலை செய்துள்ளார். அதன்பின்னரும் ஆத்திரம் தீராமல் மனைவியின் பெற்றோரான சஞ்சீப் கோஷ் மற்றும் சஞ்சீப்பின் மனைவி ஜுனு கோஷ் ஆகியோரையும் படுகொலை செய்துள்ளார்.

இதன்பின்னர், தனது மகளுடன் போலீசில் சென்று சரண் அடைந்த அவர், 3 படுகொலைகளை செய்த விவரங்களை போலீசாரிடம் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார். இதனை அடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்