வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்து இளம்பெண்ணை விபசாரத்தில் தள்ளிய காதலன் உள்பட 3 பேர் கைது

வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்து இளம்பெண்ணை விபசாரத்தில் தள்ளிய காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.;

Update: 2022-08-20 17:31 GMT

பெங்களூரு:

விடுதியில் விபசாரம்

பெங்களூரு சிவானந்தா சர்க்கிள் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் விபசாரம் நடப்பதாக ஐகிரவுண்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் தங்கும் விடுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அங்கு இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.

இதனால் அந்த இளம்பெண்ணை போலீசார் மீட்டு காப்பகத்தில் விட்டனர். இந்த நிலையில் இளம்பெண் தன்னை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் தள்ளியதாக போலீசாரிடம் கூறினார். இதனால் அவரிடம் போலீசார் மேற்கொண்டு விசாரித்தனர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது.

வேலை வாங்கி தருவதாக...

அதாவது மண்டியா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணும், பிரம்மேந்திரா என்பவரும் காதலித்து வந்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண் தனக்கு பெங்களூருவில் ஏதாவது வேலை வாங்கி தரும்படி கூறியுள்ளார். இதனால் இளம்பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பிரம்மேந்திரா பெங்களூருவுக்கு அழைத்து வந்து உள்ளார்.

பின்னர் மஞ்சுளா என்ற பெண்ணுடன் சேர்ந்து கொண்டு தனது காதலியை பிரம்மேந்திரா விபசாரத்தில் தள்ளி உள்ளார். விபசாரம் மூலம் கிடைக்கும் பணத்தை பிரம்மேந்திரா ஆடம்பரமாக செலவு செய்து வந்து உள்ளார். இளம்பெண்ணை வைத்து தங்கும் விடுதியில் விபசாரம் நடப்பது தெரிந்தும் அந்த விடுதியின் உரிமையாளர் சந்தோசும் இதற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரம்மேந்திரா, மஞ்சுளா, சந்தோஷ் ஆகியோரை ஐகிரவுண்டு போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்