மேற்கு வங்காளத்தை சேர்ந்த 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

மேற்கு வங்காளத்தை சேர்ந்த 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு என்.ஐ.ஏ.கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது

Update: 2022-11-30 21:25 GMT

பெங்களூரு:-

மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர்கள் சோகைல் என்கிற நசீர்(வயது 28), ஹபிபூர் ரகுமான்(25), மொசரப் உசேன்(22). இவர்கள் 3 பேரும் ஜமாத்துல் முகைதீன் வங்காளதேசம் என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தனர். மேலும் அந்த பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக 3 பேரும் பெங்களூருவில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து இருந்தனர். இந்த வழக்கு கடந்த 2020-ம் ஆண்டு என்.ஐ.ஏ.க்கு மாற்றப்பட்டது.

கைதான 3 பேர் மீதும் பெங்களூருவில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. அப்போது 3 பேரும் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்ட கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதனால் 3 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.48 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்