கர்நாடகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழப்பு
கர்நாடகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்தனர்.;
பெங்களூரு:
கர்நாடகத்தில் நேற்று 10 ஆயிரத்து 171 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 181 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு நகரில் 110 பேருக்கும், ராமநகர், மைசூருவில் தலா 10 பேருக்கும், பல்லாரியில் 9 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 6 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சையில் இருந்தவர்களில் பெங்களூருவில் 2 பேரும், மைசூருவில் ஒருவரும் என மொத்தம் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களில் 127 பேர் குணம் அடைந்தனர். 2 ஆயிரத்து 899 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு விகிதம் 1.77 ஆக உள்ளது. மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக உயிரிழப்புகள் ஏற்படாத நிலையில் நேற்று ஒரே நாளில் 3 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.