மருந்துக்கடை உரிமையாளர் வீட்டில் திருடிய 3 பேர் கைது

மருந்துக்கடை உரிமையாளர் வீட்டில் திருடிய 3 பேர் கைது செய்த போலீசார் ½ கிலோ தங்க நகைகள் மீட்டுள்ளனர்.

Update: 2023-02-04 21:56 GMT

கொள்ளேகால்:-

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா பசவேஸ்வராநகரை சேர்ந்தவர் வினய். மருந்துக்கடை உரிமையாளர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஷிவமொக்காவிற்கு சென்றிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் இவரது வீட்டின் பூட்டை உடைத்து, தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றனர். இது குறித்து கொள்ளேகால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து திருடர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த திருட்டு தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் காமகெரேவை சேர்ந்த பாரத் (வயது 23), குண்டலுபேட்டையை சேர்ந்த காவ்யா (21), மைசூருவை சேர்ந்த லோஹித் குமார் (25) என்று தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து 513 கிராம் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்