ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்புப்படையினர் அதிரடி

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர்.;

Update: 2022-05-26 11:53 GMT

கோப்புப்படம்

https://www.dailythanthi.com/News/India/2022/05/13183049/Jammu-and-Kashmir-Terrorist-shot-dead-by-security.vpf

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஜுமாகுந்த் கிராமத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக காவல் துறைக்கு கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அங்கு பாதுகாப்புப்படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்று அதிகாரி ஒருவர் கூறினார். என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் போன்றவை மீட்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்