டிராக்டர் கவிழ்ந்து 3 தொழிலாளிகள் சாவு

மைசூரு அருகே டி.நரசிப்புராவில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 தொழிலாளிகள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.;

Update: 2022-10-30 18:45 GMT

மைசூரு, அக்.31-

டிராக்டர் கவிழ்ந்து விபத்து

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா நேரகேத்தனஹள்ளி கிராமத்தில் விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் மக்காச்சோளம் விளைவித்திருந்தார். இந்த மக்காச்சோளத்தை அறுவடை செய்ய டிராக்டரில் அறுவடை எந்திரத்தை எடுத்து வரப்பட்டது. மேலும் டிராக்டரில் டிரைவர் உடன் 3 தொழிலாளிகள் இருந்தனர். டி.நரசிப்புரா மெயின் ரோடு பகுதியில் வந்தபோது, திடீரென்று டிராக்டர் கீழே கவிழ்ந்தது.

3 பேர் சாவு

இதில் டிராக்டரில் பயணித்த 3 பேர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது டிராக்டர் விழுந்தது. இதில் பலத்தகாயமடைந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். டிராக்டர் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

இந்த விபத்தை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த மக்கள் டி.நரசிப்புரா போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்தவர்கள் டி.நரசிப்புரா தாலுகா பூதனஹள்ளியை சேர்ந்த மரிஜோகி (வயது 45), பிரகாஷ் (33), சந்தோஷ் (19) என்று தெரியவந்தது.

அவர்கள் 3 பேரின் உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக டி.நரசிப்புரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து டி.நரசிப்புரா போலீசார் வழக்கு ப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்