மராட்டியத்தில் கார் கிணற்றில் விழுந்து 3 பேர் பலி

மராட்டியத்தில் கார் கிணற்றில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.;

Update: 2022-11-03 19:37 GMT

புல்தானா,

மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்தில் பழைய கிணற்றில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒரு பெண் மற்றும் அவரது மகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராம்நகர் தேயுல்கான்ராஜாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சுவாதி முர்குதே (வயது 35) அவரது கணவர் அமோல் முர்குதே (வயது 39) மற்றும் அவர்களது மகள் சித்தி (வயது 8) மூவரும் காரில் சென்று கொண்டிருந்தனர். சுவாதி காரை ஓட்டினார்.

இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக சுவாதி பிரேக்கை மிதிப்பதற்குப் பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததில் கார் எதிரில் வந்த பைக் ஒன்றின் மீது மோதி அருகிலிருந்த பழைய கிணறு ஒன்றில் விழுந்தது.

இதில் சுவாதி மற்றும் அவரது மகள் சித்தி இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் அவர்களை மீட்க முயன்ற ஒருவரும் உயிரிழந்தார். அமோல் முர்குதே மட்டும் பத்திரமாக வெளியே வந்தார். உயிரழந்த மூன்று பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

சுவாதி கார் ஓட்ட கற்றுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்