பஞ்சாப் பெரோஸ்பூர் மாவட்டத்தில் 3 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்

பெரோஸ்பூர் மாவட்டத்தில் சுமார் 3 கிலோ எடை கொண்ட ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update:2023-08-14 00:38 IST

கோப்புப்படம் 

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மச்சிவரா கிராமத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் பஞ்சாப் போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் சுமார் 3 கிலோ எடை கொண்ட ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அங்குள்ள வயல் வெளியில் கருப்பு நிற பை ஒன்றில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த போதைப்பொருள் எல்லை தாண்டி இந்தியாவிற்குள் கடத்தி வரப்பட்டதாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்