உ.பி: ரூ. 20 லட்சம் மதிப்புள்ள சட்ட விரோதமான மதுபானத்துடன் 3 பேர் கைது

உத்தரபிரதேசத்தில் 20 லட்சம் மதிப்புள்ள சட்ட விரோதமான மதுபானத்துடன் 3 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2022-12-22 17:41 GMT

நொய்டா,

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் டெல்லியை தளமாகக் கொண்டு மாநிலங்களுக்கு இடையேயான மது கடத்தல் கும்பலை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 20 லட்சத்திற்கும் அதிகமான சுமார் 4,500 லிட்டர் மதுவையும் பறிமுதல் செய்தனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையின் போது இந்த சட்டவிரோத மதுபானம் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதாக கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் (நொய்டா) அசுதோஷ் திவேதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில் செக்டார் 20 காவல் நிலைய அதிகாரிகள் குழுவினால் சந்தேக நபர்களின் கார்களை மறித்து, அதில் இருந்த மதுபாட்டில்கள் அடங்கிய அட்டைபெட்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் மூன்று பேரை கைதுசெய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை விசாரித்தபோது, அவர்கள் குருகிராமில் இருந்து மதுபானம் வாங்கியதாக போலீசாரிடம் தெரிவித்தனர். மதுபானம் வாங்கிய பிறகு, அதனை டெல்லி எல்லைகளில் பல்வேறு வழிகளில் மதுபானங்கள் விற்பனை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கும்பலின் மூளையாக செயல்பட்ட கே.பி மற்றும் அவரது மூன்று கூட்டாளிகள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை விரைவில் கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்