கோழிக்கோட்டில் போதை மாத்திரைகள் கடத்திய 3 பேர் கைது

Update: 2022-09-20 01:56 GMT

கோழிக்கோடு:

கோழிக்கோடு மாவட்டத்தில் போதை மாத்திரைகள் விற்பனை அதிகரித்து வருகிறது. போலியாக டாக்டர் பரிந்துரை சீட்டை காண்பித்து, மருந்து கடைகளில் குறிப்பிட்ட மாத்திரைகளை வாங்கி தேவைப்படுபவர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்த மாத்திரைகள் சாப்பிட்டால் போதை தலைக்கேறி, நீண்ட நேரம் போதையில் வைத்திருக்கும் என கூறப்படுகிறது.

இதையடுத்து கோழிக்கோடு மதுவிலக்கு போலீசார் மாஹி கடற்கரை பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக 3 பேர் வந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும், தப்பியோட முன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சுற்றி வளைத்து 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் நடத்திய சோதனையில், 68 போதை மாத்திரைகள் இருப்பதும், கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக மாஹி பகுதியை சேர்ந்த முகமது மஜீத் (வயது 22), தலச்சேரியை சேர்ந்த அல்தாப் (41), பரதேஷ் (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்