கர்நாடகாவில் இன்று புதிதாக 24 பேர் மந்திரிகளாக பதவியேற்பு

கர்நாடகா புதிய காங்கிரஸ் அரசில் இன்று புதிதாக 24 பேர் மந்திரிகளாக பதவியேற்கின்றனர்.

Update: 2023-05-27 01:23 GMT

பெங்களூரு,

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. கர்நாடக முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் கடந்த 20ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். அப்போது 8 பேர் மந்திரிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்திவந்த நிலையில், இன்று புதிதாக 24 பேர் மந்திரிகளாக பதவியேற்க உள்ளனர்.

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். மேலும், மகாதேவப்பா, எச்.கே.பாட்டீல், மது பங்காரப்பா, உள்ளிட்டோரும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த 24 பேரும் இன்று காலை 11.45 மணியளவில் கவர்னர் மாளிகையில் மந்திரிகளாக பதவியேற்கின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்