24 'மெமு' ரெயில்கள் நாளை ரத்து

பெங்களூரு-ஜோலார்பேட்டை ரெயில் உள்பட 24 ‘மெமமு’ ரெயில்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது என்று தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Update: 2023-03-10 20:26 GMT

பெங்களூரு:-

24 'மெமு' ரெயில்கள் ரத்து

கோலார் மாவட்டம் தேக்கல் ரெயில் நிலையத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிக்னல் உள்பட பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மெமு ரெயில் உள்பட பல்வேறு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

* கே.எஸ்.ஆர். பெங்களூரு-பங்காருபேட்டை-கே.எஸ்.ஆர். பெங்களூரு (வண்டி எண்: 06389/90), கே.எஸ்.ஆர். பெங்களூரு-பங்காருபேட்டை-கே.எஸ்.ஆர். பெங்களூரு (16522/21), கே.எஸ்.ஆர். பெங்களூரு-குப்பம்-கே.எஸ்.ஆர். பெங்களூரு (06529/30), கே.எஸ்.ஆர். பெங்களூரு-மாரிகுப்பம் (06263), மாரிகுப்பம்-பங்காருபேட்டை (07383), பையப்பனஹள்ளி-மாரிகுப்பம் (01779), மாரிகுப்பம்-பங்காருபேட்டை (01780), கே.எஸ்.ஆர். பெங்களூரு-மாரிகுப்பம் (06396), மாரிகுப்பம்-கே.ஆர்.புரம்-மாரிகுப்பம் (01793/94), மாரிகுப்பம்-கே.எஸ்.ஆர். பெங்களூரு (06395), சர் எம்.விசுவேஸ்வரய்யா முனையம் பெங்களூரு- பங்காருபேட்டை (06528), பங்காருபேட்டை-குப்பம் (06289), குப்பம்-கே.எஸ்.ஆர். பெங்களூரு (06292), கே.எஸ்.ஆர் பெங்களூரு-மாரிகுப்பம் (06561), மாரிகுப்பம்-கே.எஸ்.ஆர். பெங்களூரு-மாரிகுப்பம் (01773/74), மாரிகுப்பம்-கே.ஆர்.புரம் (06562), கே.ஆர்.புரம்-குப்பம் (06291), குப்பம்-பங்காருபேட்டை (06290), கே.எஸ்.ஆர். பெங்களூரு-ஜோலார்பேட்டை (16520) ஆகிய 24 'மெமு' ரெயில்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

* ஜோலார்பேட்டை-கே.எஸ்.ஆர். பெங்களூரு 'மெமு' ரெயில் (16519) நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

சென்னை-மைசூரு எக்ஸ்பிரஸ்

* மாரிகுப்பம்-பையப்பனஹள்ளி 'மெமு' ரெயில் (01778) நாளை மாரிகுப்பம்-பங்காருபேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் பங்காருபேட்டையில் இருந்து இருந்து இயங்க உள்ளது.

* மைசூரு-கொச்சுவேலி தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16315) நாளை கே.ஆர்.புரம், ஒயிட்பீல்டு, பங்காருபேட்டை, குப்பம், திருப்பத்தூர் வழியாக செல்வதற்கு பதிலாக பெங்களூரு கண்டோன்மெண்ட், பையப்பனஹள்ளி, ஓசூர், தர்மபுரி, ஓமலூர் மற்றும் சேலம் வழியாக இயங்கும்.

* எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-மைசூரு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (12609) நாளை 2 மணி நேரமும், திருப்பதி-சர் எம்.விசுவேஸ்வரய்யா முனையம் பெங்களூரு வாராந்திர அதிவிரைவு ரெயில் (22617) ஒரு மணி நேரமும் தாமதமாக இயங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்