கேரளாவில் மேலும் 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இதுவரை பதிவான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 949 ஆக அதிகரித்துள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்கத்தில் பதிவான தினசரி பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 3 இலக்கத்தை எட்டியுள்ளது.
இதன்படி கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 230 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 949 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.