திருட்டு வழக்குகளில் 23 பேர் கைது; ரூ.1 கோடி நகைகள், வாகனங்கள் மீட்பு

பெங்களூரு அருகே திருட்டு வழக்குகளில் 23 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-06 18:45 GMT

தொட்டபள்ளாப்புரா:

பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திருட்டு, கொள்ளை, சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் கைதான நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், வாகனங்கள் வைக்கப்பட்டு இருந்தது. அந்த நகைகளை புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜுன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவில் திருட்டு, சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்திருந்தது. இந்த சம்பவங்களில் தொடர்புடைய கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது. தனிப்படை போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் தொட்டபள்ளாப்புரா, நெலமங்களா உள்ளிட்ட பகுதியில் திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 23 பேரை கைது செய்துள்ளனர். கைதான நபர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், ெராக்கப்பணம், வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொட்டபள்ளாப்புரா மண்டலத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவான 50-க்கும் மேற்பட்ட திருட்டு, சங்கிலி பறிப்பு, கொள்ளை வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது.

இவ்வாறு மல்லிகார்ஜுன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்