இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 210 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 210 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-12-10 04:20 GMT

Image Courtesy: PTI

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. கடந்த பல வாரங்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது மக்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 210 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,46,74,649 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4,047 ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,30,654 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,41,39,948 ஆக உயர்ந்து உள்ளது. இந்தியாவில் இதுவரை மட்டும் 219.96 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்