“எனக்கு கல்யாணம் வேணும்” - அமைச்சர் ரோஜா அடம்பிடித்த முதியவர் - வைரலாகும் ‘குபீர்’ வீடியோ

சுற்றுலாத்துறை மந்திரி ஆர்.கே.ரோஜா தனது நகரி சட்டமன்றத் தொகுதியில் வீடு வீடாகச் சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.

Update: 2022-05-18 15:09 GMT
ஐதராபாத்,

ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவின்பேரில், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்களுடைய சட்டமன்றத் தொகுதியில் வீடு வீடாகச் சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர். அந்த வகையில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ஆர்.கே.ரோஜா தனது நகரி சட்டமன்றத் தொகுதியில் வீடு வீடாகச் சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது முதியவர் ஒருவரிடம் தங்களுக்கு முதியோர் உதவித்தொகை வருகிறதா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த முதியவர் முதியோர் உதவி தொகை வருகிறது. ஆனால் என்னை பார்த்துக் கொள்வதற்கு யாருமில்லை எனவே திருமணம் செய்து வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அமைச்சர் ரோஜா குபீரென சிரித்து விட்டார். அரசால் உதவித் தொகை மட்டுமே வழங்க முடியும் திருமணம் எல்லாம் செய்து வைக்க இயலாது என சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

மேலும் செய்திகள்