ரெயில்கள் மூலம் சட்டவிரோதமாக ஆயுத கடத்தல் - தடுக்க மம்தா பானர்ஜி உத்தரவு
ரெயில்கள் மூலமாக காரக்புருக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதாக தகவல்கள் வந்தன. இதனையடுத்து, ஆயுதக்கடத்தலை தடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளாா்.
கொல்கத்தா,
கொல்கத்தாவில் நடைபெற்ற நிர்வாக ஆய்வுகூட்டத்தில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டாா். அப்போது அவர் கூறியதாவது,
மேற்கு வங்காளத்தின் அண்டை மாநிலங்களான பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலமாக காரக்புருக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதாக தகவல்கள் வந்தன. இதனையடுத்து, ஆயுதக்கடத்தலை தடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளாா்.
காரக்புா் மாவட்டம் முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்துமாறு அந்த மாநில டிஜிபி யிடம் கேட்டுக்கொண்டுள்ளாா். சட்டவிரோதமாக தயாாிக்கப்பட்ட ஆயுதங்களை வாங்கி பலா் மேற்கு வங்கத்திற்குள் நுழைவதாக அவா் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் ரெயில்வே போலீசாாின் செயல்பாடு குறித்து அவா் மெத்தனபோக்குடன் இருப்பதாக அவர் தொிவித்தாா். ரெயில்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என ரெயில்வே போலீசாருக்கு உத்தரவிட்டார்.
மேலும், சட்டவிரோதமாக மரங்களை வெட்டி விற்பனை செய்யும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அவா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டா்ா.
இதற்கிடையில், மேற்கு வங்காளத்தின் வட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. அந்த பகுதிகளுக்கு மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அங்கு அனுப்ப உத்தரவிட்டாா். கொசு வலைகளை விநியோகிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தின் முக்கிய ரெயில் நிலையமாக காரக்பூர் திகழ்கிறது, இந்த ரெயில் நிலையத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு அதிக அளவு மக்கள் பயணம் செய்கின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.