சி.பி.ஐ சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை - ப.சிதம்பரம் தகவல்
சி.பி.ஐ. சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
சி.பி.ஐ. சோதனை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:-
சென்னையில் உள்ள என் வீட்டிலும், டெல்லியில் உள்ள எனது அதிகாரபூர்வ இல்லத்திலும் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. என்னிடம் ஒரு முதல் தகவல் அறிக்கையை சி.பி.ஐ. காட்டியது. அதில், குற்றம் சாட்டப்பட்டவராக என் பெயர்இல்லை.
சி.பி.ஐ. குழு, பலமணி நேர ம் சோதனை செய்தபோதிலும், எதையும் கண்டுபிடிக்கவோ, கைப்பற்றவோ இல்லை. மேலும், சோதனை க்குசி.பி.ஐ. தேர்ந்தெடுத்த தருணம் சுவாரஸ்யமானது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.