உத்தரப்பிரதேசம்: பேருந்து கவிழ்ந்ததில் 3 பேர் பலி, 25 பேர் பலத்த காயம்

உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் பேருந்து ஒன்று தழைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Update: 2022-05-17 10:03 GMT
கோப்புப்படம்
லக்னோ,

பேருந்து ஒன்று ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 80 முதல் 85 பயணிகளை ஏற்றிக்கொண்டு பீகார் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. 

பேருந்து இன்று அதிகாலை உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள சித்தார்பூர் கிராமத்தில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த நிலையில், தழைகீழாக கவிழ்ந்தது. 

இந்த திடீர் விபத்தில்  3 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்ததாக போலீசார் தெரிவித்தர். அவர்கள் கான்பூரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்