நாட்டில் 2 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 1 ஆயிரத்து 569 ஆக குறைந்தது.

Update: 2022-05-17 03:21 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தபோதிலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. நேற்று முன் தினம் 2,487 நேற்று 2,202 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 1,569 ஆக குறைந்தது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,31,23,801 லிருந்து 4,31,25,370 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்தனர். இதுவரை 5,24,260 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 17,317 ல் இருந்து 16,400 ஆனது. இந்தியாவில் ஒரே நாளில் 2,467 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குண்மடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 

இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,82,243 லிருந்து 4,25,84,710 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் 10,78,005 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  இந்தியாவில் இதுவரை 191.48 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்