பாலியல் புகார்: ராஜஸ்தான் மந்திரி மகனை கைது செய்ய ஜெய்ப்பூர் விரைந்தது டெல்லி போலீஸ்

பாலியல் புகாரில் சிக்கிய ராஜஸ்தான் மந்திரி மகனை கைது செய்ய டெல்லி போலீஸ் ஜெய்ப்பூர் விரைந்தது.;

Update: 2022-05-15 22:46 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

ராஜஸ்தான் பொது சுகாதாரத்துறை மந்திரி மகேஷ் ஜோஷியின் மகன் ரோகித் ஜோஷி மீது, 23 வயது இளம்பெண் ஒருவர் சமீபத்தில் டெல்லி போலீசில் பாலியல் புகார் தெரிவித்தார். அதாவது திருமணம் செய்வதாக கூறி ஒரு ஆண்டுக்கும் மேலாக தன்னை ரோகித் ஜோஷி பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் தனது புகாரில் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ரோகித் ஜோஷியை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அவர் தலைமறைவானார்.

இதைத்தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு நேற்று டெல்லி போலீசார் சென்றனர். அங்கு அவரை கைது செய்வதற்காக பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்