ஒருவருக்கு ஒரு பதவி, குடும்பத்தில் ஒருவருக்கு ‘சீட்’ - காங்கிரஸ் மாநாட்டில் பிரகடனம்

கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே வழங்குவது, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட ‘சீட்’ வழங்குவது என்று காங்கிரஸ் மாநாட்டில் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.;

Update: 2022-05-15 21:08 GMT
உதய்ப்பூர், 

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் சிந்தனையாளர் அமர்வு மாநாட்டில், குஜராத், இமாசலபிரதேச சட்டசபை தேர்தல்கள், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்களை சந்திப்பதற்கான வியூகம் வகுப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். அதன் அடிப்படையில், மாநாட்டின் இறுதியில் ஒரு பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்கப்படும். அதே குடும்பத்தில் இன்னொருவருக்கு டிக்கெட் வேண்டுமென்றால், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அவர் கட்சிக்காக பணியாற்றி இருக்க வேண்டும்.

‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற கொள்கையும் பின்பற்றப்படும். ஒருவர் 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில் தொடரக்கூடாது. புதியவர்களுக்கு வழிவிட வேண்டும்.

கட்சியின் அனைத்து மட்டங்களிலும் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 50 சதவீத பதவிகள் அளிக்கப்படும்.

கட்சியில் 3 புதிய துறைகள் உருவாக்கப்படும். பொது உட்கட்சி ஆய்வு, தேர்தல் நிர்வாகம், தேசிய பயிற்சி என்ற 3 துறைகள் உருவாக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்