சரத்பவார் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு; பாஜக தலைவரின் கன்னத்தில் 'பளார்' அறை விட்ட தொண்டர்கள்!

இந்த வீடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-05-15 13:33 GMT
மும்பை,

பாஜக தலைவர் ஒருவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு எதிராக சமூக வலைதளத்தில் ஒரு அவதூறு கருத்து பதிவிட்டுள்ளார். 

இதனையடுத்து, சரத் பவாருக்கு எதிராக அவதூறு பதிவு எழுதியதற்காக, பாஜக செய்தித் தொடர்பாளர் விநாயக் அம்பேகரை தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சியினர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் வீடியோவை மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் வெளியிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது:-

“மராட்டிய பிரதேச பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் விநாயக் அம்பேகர், என்சிபி குண்டர்களால் தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதலை பாஜக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த என்சிபி குண்டர்கள் உடனடியாக கையாளப்பட வேண்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, சரத்பவார் குறித்து அவதூறு பரப்பியதாக, தானே நகர குற்றப்பிரிவு போலீசார் நடிகை கேடகி சிதாலேயை நேற்று அதிரடியாக கைது செய்தனர். அதே போல, சரத்பவார் குறித்து அவதூறு பரப்பியதாக 23 வயதான மாணவர் நிகில் பாம்ரே என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இப்போது இந்த வீடியோ வெளியாகி  அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்