ரூ.6 கோடி மின் திருட்டில் ஈடுபட்டதாக தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு
ரூ.5.93 கோடி மின் திருட்டில் ஈடுபட்டதாக தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
தானே,
ரூ.5.93 கோடி மின் திருட்டில் ஈடுபட்டதாக தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
ரூ.5.93 கோடி மின் திருட்டு
தானே மாவட்டம் முர்பாடு, பாலேகாவ் பகுதியில் தனியார் கல் உடைக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் சமீபத்தில் மராட்டிய மாநில மின் பகிர்வு நிறுவன (எம்.எஸ்.இ.டி.சி.எல்.) அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஆலையில் மின் திருட்டு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆலை உரிமையாளர் சில சாதனங்களை பயன்படுத்தி மின் மீட்டரை முடக்கி வைத்து இருந்தார்.
கல் உடைக்கும் ஆலை கடந்த 29 மாதங்களில் ரூ.5.93 கோடி மதிப்பிலான 34 லட்சத்து 9 ஆயிரத்து 910 யூனிட் மின் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
வழக்குப்பதிவு
சம்பவம் தொடர்பாக மின் நிறுவன அதிகாரிகள் முர்பாடு போலீசில் அளித்த புகார் அளித்தனர்.
அதன்பேரில் மின் திருட்டு தொடர்பாக முர்பாடு போலீசார் ஆலை உரிமையாளர் சந்திரகாந்த் பாம்ரே, அவரது மகன் சச்சின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.