அருணாச்சலப்பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு..!

அருணாச்சலப்பிரதேசத்தில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2022-05-13 09:41 GMT
கோப்புப் படம்
சாங்லாங்,

அருணாச்சலப்பிரதேச மாநிலம் தெற்கு சாங்லாங் பகுதியில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு சாங்லாங் பகுதியிலிருந்து தெற்கே 222 கிமீ தொலைவில் 120 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 12.39 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக இமாச்சலப் பிரதேசத்தின் தரம்ஷாலாவிலிருந்து 57 கிமீ வட-வடமேற்கில் இன்று காலை 7.46 மணியளவில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்