பிரதமர் மோடி ஏன் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதில்லை? மல்லிகார்ஜுன கார்கே கேள்வி

பிரதமர் மோடி ஏன் பத்திரிகையாளர்களுக்கு முன்னால் வருவதில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.;

Update: 2022-05-13 09:10 GMT
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கருத்தாய்வுக் கூட்டம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.

இந்தநிலையில்,  கூட்டத்திற்கு வந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

 ''பிரதமர் மோடி, ஏன் பத்திரிகைகளுக்கு முன்னால் வருவதில்லை என்று எனக்குப் புரியவில்லை. நமது ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பாற்றுவது முக்கியம். எதிர்ப்புகளை அடக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். நமது பேச்சுரிமையை பாதுகாக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

மேலும், 'எங்களிடமே பணம் இல்லை என்றால் கூட்டாளிகள் முதலீடு செய்வார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்? எனவே பிற கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு முன்னால் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும். அதன்பின்னர் பயணத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்