இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

இமாச்சல பிரதேசத்தில் இன்று ரிக்டர் 3.5 என்ற அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update: 2022-05-13 05:24 GMT
சிம்லா,

இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் இருந்து 57 கிமீ வட-வடமேற்கில் இன்று காலை 7.46 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கம் ரிகடர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

லேசான அளவில் நில அதிர்வு ஏற்பட்ட காரணத்தால் குடியிருப்பு பகுதிகளில் அதிக பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலநடுக்கத்தால் உயிர் சேதம், பொருட் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. 

மேலும் செய்திகள்