டெல்லியிலிருந்து உதய்பூருக்கு ரெயிலில் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து உதய்பூருக்கு ராகுல் காந்தி ரெயிலில் பயணம் மேற்கொண்டார்.;
புதுடெல்லி,
உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியொன்று மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. உதய்பூரில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்பதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் அங்கு விரைந்து வருகின்றனர். கூட்டத்தில் ராகுல் காந்தியை மீண்டும் கட்சித் தலைவராக நியமிப்பதற்கு வலியுறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டெல்லியிலிருந்து உதய்பூருக்கு ரெயிலில் பயணம் மேற்கொண்டார்.
இதற்காக, ராகுல் காந்தி டெல்லி சராய் ரோஹில்லா ரெயில் நிலையத்தை இன்று மாலை வந்தடைந்தார். அவரை வழியனுப்பி வைக்க காங்கிரஸ் தொண்டர்கள் ரெயில் நிலையத்தில் கூடி இருந்தனர். அப்போது, ரெயில் நிலையத்திலிருந்த தொழிலாளிகளுடன் ராகுல் காந்தி உரையாடினர்.