திருமண விழாவில் கலந்து கொண்டு திரும்பும் வழியில் வாகனம் தலைகீழாக கவிழ்ந்து விபத்து - 3 பேர் பலி, 18 பேர் காயம்
சத்தீஸ்கரில் திருமண விழாவில் கலந்து கொண்டு திரும்பும் வழியில் வாகனம் தலைகீழாக கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.;
ராய்பூர்,
சத்தீஸ்கரில் உள்ள தோதோய் சௌக் அருகே உள்ள பஞ்சதேவரியில் திருமண விழாவில் கலந்து கொண்டு திரும்பும் வழியில் வாகனம் தலைகீழாக கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.
வாகனம் கந்தாய் கிராமத்திற்குச் அருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையில் கால்நடைக் கூட்டம் சென்றுள்ளது. அதைப் பார்த்த டிரைவர் வாகனத்தை சாலையிலிருந்து கீழே இறக்க முடிவு செய்துள்ளார். இதனால் வாகனம் தலைகீழாக புரண்டு விபத்துக்குள்ளானது.
இதையடுத்து காயமடைந்தவர்கள் அருகிலிருந்த கந்தாய் சமூக சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு புவன் ஜோஷி (வயது 65) என்பவர் உயிரிழந்தார். தொடர்ந்து காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சர்ஜு டாண்டன் (வயது 21) மற்றும் ராஜ் டாண்டன் (வயது 22) என்ற 2 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 279 பொது வழியில் வேகமாக வாகனம் ஓட்டுதல் அல்லது வாகனம் ஓட்டுதல், மற்றும் 337 மற்றவர்களின் உயிருக்கோ தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.