ஒலி அளவை குறைக்காவிட்டால் ஒலிப்பெருக்கிகளை அகற்ற வேண்டும்; கர்நடக முதல் மந்திரி உத்தரவு

கர்நாடகத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஒலி அளவை குறைக்காவிட்டால் மசூதிகள் உள்பட எங்கெங்கு ஒலிப்பெருக்கிகள் உள்ளதோ அவற்றை அகற்ற வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-05-09 13:57 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஒலி அளவை குறைக்காவிட்டால் மசூதிகள் உள்பட எங்கெங்கு ஒலிப்பெருக்கிகள் உள்ளதோ அவற்றை அகற்ற வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

ஒலி மாசு விவகாரம் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சட்டத்துறை நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விதான சவுதாவில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய பசவராஜ் பொம்மை, "சுப்ரீம் ஒலி மாசு விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவை பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். 15 நாட்களுக்குள் மசூதிகள் உள்பட எங்கெங்கு ஒலிப்பெருக்கிள் பயன்படுத்தப்படுகிறதோ அங்கு ஒலி மாசு அளவை குறைக்க வேண்டும். 

இல்லாவிட்டால் அத்தகைய ஒலிப்பெருக்கிகள் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து ஒரு தெளிவான சுற்றறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்" என்று உத்தரவிட்டார். இந்த சுற்றறிக்கை செவ்வாய்க்கிழமை)வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்