கேரளா: காணாமல் போன தனியார் கல்லூரி மாணவி ஆற்றில் பிணமாக மீட்பு...!

கேரளாவில் காணாமல் போன தனியார் கல்லூரி மாணவி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-05-09 08:10 GMT
பாலக்காடு, 

கேரள மாநிலம் கண்ணூர் அருகே காணாமல் போன மாணவியின் உடல் ஆற்றில் மிதந்தபடி காணப்பட்டது. போலீசார் அந்த மாணவியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,

கண்ணூர் மாவட்டம் இருட்டி பகுதியை சேர்ந்தவர் செய்யது. இவரது மகள் ஜஹானா செரீனா( வயது19). இவர் இங்குள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். 

இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி  கல்லூரி சென்று விட்டு வருவதாக வெளியே சென்ற மாணவி இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையொட்டி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இருட்டி போலீசாரிடம் புகார் செய்தார்கள். 

போலீஸார் வழக்குப் பதிவு செய்து உறவினர்கள் உதவியுடன் மாணவியை தேடி வந்தார்கள். இந்த நிலையில் இந்தப் பகுதியில் உள்ள கோழி கனவு ஆற்றில் பாலத்தின் அடியில் நேற்று மாலை மாணவியின் உடல் இறந்த நிலையில் காணப்பட்டது. 

போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரிகாரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தற்போது இதுகுறித்து வழக்குப்பதிவு செய;த போலீசார், கல்லூரி சென்ற மாணவி ஆற்றில் பிணமாக கிடந்தது எப்படி என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்