புதிதாக நியமிக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இன்று பதவியேற்பு

நீதிபதிகள் சுதான்சு தூலியா, பர்திவாலா ஆகிய இருவரும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக இன்று பதவியேற்கின்றனர்.

Update: 2022-05-09 00:06 GMT
புதுடெல்லி, 

கவுகாத்தி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சுதான்சு தூலியா, குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி ஜே.பி.பர்திவாலா ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

அந்தப் பரிந்துரையை ஏற்று சுதான்சு தூலியா, பர்திவாலா ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் நீதிபதிகள் சுதான்சு தூலியா, பர்திவாலா ஆகிய இருவரும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக இன்று பதவியேற்கின்றனர். அவர்களுக்கு, சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட அரங்கில் காலை 10.30 மணிக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார். இந்த இரு நீதிபதிகள் பதவியேற்பின் மூலம், சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் அதன் முழு நீதிபதிகள் எண்ணிக்கையான 34-ஐ எட்டுகிறது.

மேலும் செய்திகள்