திருப்பதி: ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை திறப்பு

.கடந்தாண்டு நவம்பரில் பெய்த கன மழை காரணமாக, சீனிவாசமங்காபுரம் அருகில் உள்ள ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் பாறைகள் உருண்டு விழுந்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-05-05 22:29 GMT

திருப்பதி அருகே உள்ள ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை, நேற்று முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.கடந்தாண்டு நவம்பரில் பெய்த கன மழை காரணமாக, சீனிவாசமங்காபுரம் அருகில் உள்ள ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் பாறைகள் உருண்டு விழுந்து பாதிக்கப்பட்டது.

அதை, தேவஸ்தானம் 3.60 கோடி ரூபாய் செலவில் செப்பனிட்டு, நேற்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, ஸ்ரீவாரிமெட்டு பாதையில் உள்ள முதல் படிக்கு பூஜை செய்து, நடைபாதை மார்க்கத்தை துவக்கி வைத்தார். இதையடுத்து, 'நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு விரைவில் தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்' என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்